சபரகமு பல்கலைக்கழக விளையாட்டுத் துறைசார்ந்த பட்டப்படிப்பியல் நுழைவு பரீட்சை இலவச வழிகாட்டல் கருத்தரங்கு…

சபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் சபரகமுவ பல்கலைக் கழகத்தில் 18.08.2020 அன்று  நடைபெற இருக்கும் விளையாட்டுத் துறைசார்ந்த(B.sc. hons degree sports science management and physical education) பட்டப்படிப்பியல் நுழைவு பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 13.08.2020 (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு களுதாவளை EDS கல்வி நிலையத்தில் நடைபெற இருக்கின்றது.

சபரகமுவ,ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகங்களில் விளையாட்டு விஞ்ஞான முகாமைத்துவம்,உடற்தொழில் பட்டப்படிப்பியல்(Apititude exam) நுழைவு பரீட்சைக்கு தோற்ற இருக்கும்  மாணவர்களை கலந்து பயன்பெறுமாறு சபரகமுவ பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட தமிழ் சமூகம் கேட்டுக் கொள்கின்றது.

மேலும் பரீட்சையின் போதான பயண,தங்குமிட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களும் அன்றைய தினம் நடைபெற இருக்கின்றது.

அறிவுறுத்தல்-அனைத்து மாணவர்களும் தம்முடைய, மற்றவருடைய சுகாதார நலன்கருதி Mask அணிந்து வரவும்.

மேலதிக தகவல்களுக்கு  +94 752422075

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்