இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை

வயல்வெளிக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எகொடவத்த, போகொடகம, தொரகடவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நிட்டம்புவ, யட்டியன பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இக்கொலைக்கான காரணம் மற்றும் இக்கொலையை ப் புரிந்த சந்தேகநபர் தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொலைச் சந்தேகநபரைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்