வெளிநாடுகளில் சிக்கியிருந்த 222 இலங்கையர்கள் வருகை!

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்குஅழைத்து வரும் திட்டத்தின் கீழ், மேலும் 222 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டார், ஜேர்மனி, மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து குறித்த இலங்கையர்கள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.23 மணிக்கு, மத்தள விமான நிலையத்தை 42 இலங்கையர்கள் வந்தடைந்துள்ளனர். மீண்டும் அதிகாலை 5.22 மணிக்கு கட்டாரிலிருந்து வந்த மற்றுமொரு விமானத்தில் இலங்கையர் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.

இன்று முற்பகல் 11.45 மணிக்கு, ஜேர்மனியிலிருந்து ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதேவேளை, இன்று நண்பகல் 12.15 மணிக்கு மாலைதீவின் மாலி நகரிலிருந்து இலங்கையர்கள் 178 பேர் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்