பேஸ்புக் ஒன்றுகூடல்; 20 பேர் சிக்கினார்கள் – போதைப்பொருட்களுடன்
மில்லனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லன்துடாவ பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட விருந்துபசார நடவடிக்கையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்தி இடம்பெற்றுக்கொண்டிருந்த விருந்துபசாரம் தொடர்பில், களுத்துறை ஊழல் ஒழிப்பு சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து பொலிஸாரினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டபோது 14 ஆண்கள், 05 பெண்கள் மற்றும் குறித்த ஹோட்டலின் உரிமையாளர் ஆகிய 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சந்தேகநபர்களிடமிருந்து 02 கிராம் 465 மில்லிகிராம் ஹெரோயின்,13 கிராம் கஞ்சா, 05 போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் வழக்குப் பொருட்கள் மில்லனிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பண்டாரகம, மெல்லமுல்ல, தெஹிவளை, பாணந்துறை, தொடங்கொட, வெல்லன்துடாவ, யட்டியன, கடுவல, பொரலஸ்கமுவ, ஹொரணை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 17, 18, 19, 20, 23, 32, 60 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை