சிறைக் கைதிகளைப் பார்வையிட 15ஆம் திகதி தொடக்கம் அனுமதி

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மையில் வெலிகடைச் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கைதியொருவர் அடையாளம் காணப்பட்டமையைத் தொடர்ந்து சிறைச்சாலைகளில் கைதிகளைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் உறவினர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மீண்டும் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் உரிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக கைதிகளைப் பார்வையிடுவதற்கு அனுமதியளிக்கப்படவுள்ளது. எனினும், கடும் வரையறைகளின் அடிப்படையில்தான் இந்தச் சந்தர்ப்பம் உறவினர்களுக்கு வழங்கப்படவுள்ளது எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்