அமைச்சுப் பதவிகள் பொறுப்பேற்பு நிகழ்வை அடுத்து கிளிநொச்சியில் பால்சோறு…!

அமைச்சுப் பதவிகள் பொறுப்பேற்பு நிகழ்வை அடுத்து கிளிநொச்சியில் பொதுஜன பெரமுன கட்சியினர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனை முன்னிட்டு கிளிநொச்சி ஏ9 வீதியால் சென்றவர்களுக்கு பால்சோறு பரிமாறப்பட்டுள்ளதுடன், பட்டாசுகளும் கொளுத்தப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் உள்ள பொதுஜன பெரமுன ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று காலை கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் வைத்து பதவியேற்றிருந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் குறித்த பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்