முன்னாள் ஜனாதிபதிக்கு அமைச்சு பதவி இல்லை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சரவையில் உள்ளடக்கப்படவில்லை என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

புதிய அமைச்சரவை நியமிக்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 3 அமைச்சு பதவிகளும் 2 இராஜாங்க அமைச்சு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அமைச்சரவை அமைச்சர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகரவை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் இரண்டிற்கு தயாசிறி ஜயசேகர மற்றும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நியமிக்கப்படவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சு பதவி தொடர்பில் சிறிது நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இன்று பதவியேற்பவர்களின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.