தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனம் – ஹரினி அமரசூரியவுக்கு! 

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான கற்கைப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் திசைக்காட்டி சின்னத்தில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இரண்டு ஆசனங்களை வென்றதுடன் தேசியப் பட்டியல் ஊடாக ஓர் ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.

இதன்படி கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு ஹரினி அமரசூரியவை நியமிக்கத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது என அந்தக் கட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.