தங்கத்தின் விலையில் திடீர் சரிவு

உலக சந்தையின் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாத காலப்பகுதியில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக உலக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கடந்த வாரம் 4.45 சதவீதம் அல்லது சுமார் 90 டொலர் சரிந்து வார இறுதியில் 1,950 டொலராக பதிவாகியுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னதான தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும் போது இதுவும் அதிகரிப்பாகும்.

கொரோனா வைரஸ் நெருக்கடியினால் தங்கத்திற்கு ஏற்பட்ட கிராக்கி காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதன் காரணமாக இலங்கையில் 24 கரட் தங்கத்தின் விலையில் ஒரு இலட்சத்திற்கும் மேலும் 22 கரட் தங்கத்தின் விலை 96 ஆயிரம் ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.