பிள்ளையானுக்கு வாழ்த்து தெரிவித்தார் காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் குமாரசிறி.
காரைதீவு பிரதேசசபையின் 30 வது அமர்வு 17.08.2020 அன்று காரைதீவு பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய உறுப்பினர் குமாரசிறி அவர்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் தமிழ்மக்கள் மத்தியில் பெரும் மாற்றத்தினை உருவாக்கியுள்ளது.
வடக்கு கிழக்கில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களில் சிறைக்குள் இருந்து கொண்டு ஐம்பத்தி நான்காயிரம் வாக்குகளை பெற்று எமது தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்கள் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அவருக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என வாழ்த்துரைத்தார். காரைதீவு பிரதேசசபைக்கு புதிய உறுப்பினராக வருகைதந்த சுதந்திகட்சி உறுப்பினர் த.ஜெயதாசன் அவர்களை வரவேற்று உரையாற்றும் போதே இவ்வாறு பிள்ளையானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை