புதிய சபாநாயகராக யாப்பா இன்று ஏகமனதாகத் தெரிவு

புதிய சபாநாயகராக யாப்பா
இன்று ஏகமனதாகத் தெரிவு

சபையில் வேறு முக்கிய பதவிகளுக்கும் உறுப்பினர்கள் தெரிவு

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

முதலாவது சபை அமர்வு இன்று முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமாகியது. இதன்போது சபாநாயகர் பதவிக்காக மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயரை சபை முதல்வர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார்.

இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்தார்.

அத்துடன், பிரதி சபாநாயகராக ரஞ்சித் சிலம்பலாபிட்டியவும், குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ ஏற்றுக்கொள்ளப்பட்டார். சபை முதல்வராக தினேஷ் குணவர்தனவின் பெயரும், ஆளுங்கட்சி கொறடாவாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

கட்சித் தலைவர்களின் புதிய சபாநாயகருக்கான வாழ்த்துரைகள், சபாநாயகரின் நன்றி உரை ஆகியன முடிவடைந்த பின்னர் சபை இன்று மாலை 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.