டெங்கு ஒழிப்பு சிரமதானம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான்

கொரோனா அனர்த்தம் காரணமாக தற்போது வழமையான செயற்பாடுகளை அரச நிறுவனங்கள் ஆரம்பித்து வருகின்றன.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகமும் வழமைக்கு திரும்பியதுடன் வெள்ளிக்கிழமை(21) காலை  டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பாரிய சிரமதானத்தை முன்னெடுத்தது.

இதன் போது இன்று காலை குறித்த பிரதேச செயலகத்தில் உள்ள திட்டமிடல் பிரிவு நிர்வாக பிரிவு சமூர்த்தி பிரிவு காணிப்பிரிவு  சமூக சேவை பெண்கள் மகளீர் அபிவிருத்தி பிரிவு கணக்கு பிரிவு கிராம அபிவிருத்தி பிரிவு மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து குறித்த சிரமதானத்தை முன்னெடுத்தனர்.

மேலும் குறித்த சிரமதான நிகழ்வானது  நாவிதன்வெளி  பிரதேச செயலாளர்  எஸ.ரங்கநாதன்  வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர்  நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன்  சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ் .சிவம்    மற்றும்  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்   பங்குபற்றலுடன்   சிறப்பாக நடைபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.