இலங்கை தமிழ் அரசு கட்சி மன்னார் கிளை கூட்டம்

இன்றைய தினம் இலங்கை தமிழ் அரசு கட்சி மன்னார் கிளை கூட்டம் கட்சியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான பிறிமுஸ் சிறாய்வா மற்றும் கட்சியின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி பின்னடைவை சந்தித்தது எதற்காக என்பது தொடர்பில் நாம் அனைவரும் கவனமெடுத்து அது தொடர்பாக ஆராய்ந்து தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லவேண்டும் அப்போதே எமது கட்சியை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் அதற்காக ஒவ்வொரு கிராமங்களிலும் குழுக்களை நியமித்து அவர்களூடாக எமது கட்சியின் செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து செல்லவேண்டும் அதற்காக கட்சி அங்கத்தவர்களாக நீங்கள் முன்னின்று செயற்பட வேண்டும் என கேட்டுகொண்டார்.

அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக கட்சி அங்கத்தவர்கள் கூறினார்கள்.

கட்சியின் நன்மை கருதி பல திட்டங்கள் கட்சி அங்கத்தவர்களால் முன்மொழியப்பட்டதுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.