அதிர்கிறது காங்கிரஸ்-தலைவராக மீண்டும் சோனியா?

டில்லியில் நேற்று 7 மணிக்கு நடைபெற்றுமுடிந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், இடைக்காலத் தலைவராக தொடர்ந்தும் சோனியா நீடிப்பார் எனவும், அடுத்த 6 மாதத்தில் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து, தலைவர் பதவியில் இருந்து ராகுல் பதவி விலகினார்.

இதனையடுத்து இடைக்கால தலைவராக சோனியா நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று ஓராண்டை கடந்து விட்ட நிலையில், புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.

இதனையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்கும் திறமையுள்ள தலைமை தேவை என ஒரு பிரிவினர் கடிதம் எழுதினர்.

இந்நிலையில், டில்லியில் நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில், மூத்த நிர்வாகிகளின் கடிதம் குறித்து ஆலோசிக்கப்பட்ட அதேவேளை, இதற்கு பதிலளித்து சோனியா அனுப்பிய கடிதத்தை, காங்கிரஸின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் வாசித்தார்.

அதில், தலைவர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாகவும், புதிய தலைவரை தெரிவு செய்யும்படியும் சோனியா குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.