மாகாண சபைத் தேர்தலில் சு.க. தனி வழி?
இந்தநிலையிலேயே தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அவதானம் செலுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற சு.கவின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்தும் சுதந்திரக் கட்சி போட்டியிட்டது. எனினும், பொதுஜன முன்னணியினரால் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு கடும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. பிரசாரங்களின்போது சரமாரியாகச் சொற்களைகள் தொடுக்கப்பட்டன. ஆசனப் பங்கீட்டிலும் அநீதி இழைக்கப்பட்டது என்ற கருத்து நிலவுகின்றது.
எனவேதான் மாகாண சபைத் தேர்தலில் தனி வழி செல்வது பற்றி ஆராயப்பட்டு வருகின்றது. இதன்படி சில மாகாணங்களில் தனித்தும் சில மாகாணங்களில் கூட்டுப் பயணத்தையும் சு.க. மேற்கொள்ளலாம் என நம்பப்படுகின்றது.
சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு செப்டெம்பர் 2ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் தீர்மானமொன்று நிறைவேற்றப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
கருத்துக்களேதுமில்லை