தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு தமிழ்க் கூட்டமைப்பை வீழ்த்துவர்
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் ஓரணியில் திரள்வார்கள்.”
– இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அடிப்படைவாதக் கட்சிகள் மற்றும் தலைவர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அவையெல்லாம் அரசியலை மையப்படுத்திய அறிவிப்புகள் ஆகும். இது மக்களுக்கும் தெரிந்துவிட்டது. இதன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய அடிப்படைவாத கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு குறைந்து இருக்கின்றது. இது சாதகமானதொரு விடயமாகும். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அடிப்படைவாதக் கட்சிகளை தோற்கடிப்பதற்கு வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்துத் தமிழ் மக்களும் எதிர்காலத்தில் ஒன்றுதிரள்வார்கள் என நம்புகின்றேன்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை