கிளிநொச்சி நேற்று மாலை விபத்து! விசேட அதிரடிப் படையினரில் ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்…
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் விசேட அதிரடிப் படையினரில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாலை 4 மணியளவில் ஏ – 9 வீதி, 155 கட்டைப் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி நகர் பகுதியில் இருந்து இரண்டு டிப்பர் வாகனங்கள் 155 ஆம் கட்டை சந்திப் பகுதியிருந்து பாரதிபுரம் திரும்பும் வேளையில் விசேட அதிரடிப் படையினர் முகாமிலிருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த படைச் சிப்பாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான தனபாலகே ரோஷன் பிரதீப் (வயது 32) என்ற சிப்பாயே பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த படைச் சிப்பாய் படுகாயங்களுடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தையடுத்து இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் இருவரும் கிளிநொச்சி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை