ஆஸ்திரேலியாவில் நுழைய பயண விலக்குக்கோரி 87 ஆயிரம் விண்ணப்பங்கள்: 15 சதவீதமானோருக்கே விலக்களிப்பு.

கடந்த மார்ச் 20 முதல் ஜூலை 31 வரை ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய பயண விலக்குக்கோரி 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய எல்லைப்படை தெரிவித்துள்ளது.

இதில் வெறும் 15 சதவீதமானோருக்கே ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான பயண விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, சமர்ப்பிக்கப்பட்ட 87,600 விண்ணப்பங்களில் 13,260 வெளிநாட்டினருக்கு மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் அதிகப்பட்சமாக கருணையின் அடிப்படையில் 1,740 பேருக்கு பயண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த நிலையில், ஆஸ்திரேலியாவில் முக்கிய சேவைகளை வழங்குவதற்காக விசா கொண்டிருக்கும் 1195 பேருக்கு பயண விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் கோவிட்-19 கமிட்டியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட கணக்குப்படி, பணி விசா உள்ளிட்ட தற்காலிக விசா கொண்டிருப்பவர்கள் மற்றும் மாணவர் விசா கொண்டுள்ள  6 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது நிலை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஆஸ்திரேலிய விதித்துள்ள பயணத் தடையினால், பல குடும்பங்கள் தனித்திருப்பதாகவும் வெளிநாட்டு மாணவர்களும் பிற விசா கொண்டிருப்பவர்களும் மன அழுத்தத்துடன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.