நவீன ஊடகத்தின் ஊடாக சமாதான நல்லிணக்க வளர்சிக்கு பாரிய பங்காக மீடிய கோர்ப்ஸ் திகழ்கிறது.

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளம் சமாதான ஊடகவியலாளர்களின் நலன் கருதி ஐந்து நாள் கொண்ட மோஜோ ஊடகவியல் தொடர்பிலான பயிற்சிப்பட்டறை கடந்த 21.08.2020_25.08.2020 வரை ஐந்து நாட்கள் கண்டி சுவிஸ் ஹோட்டலில் இடம் பெற்றது.

மூவின மக்கள் மத்தியிலும் தங்களது ஏனைய இன மத கலாசார பண்புகளை புரிந்து கொள்ளக் கூடிய வகையில் கூட்டுக் கதை ,தனி கதை உருவாக்கம் என்பனவற்றை உருவாக்குவது தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன நாடளாவியரீதியில் இருந்து இதற்காக சுமார் 21 இளம் சமாதான ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டு நான்காவது குழுவின் ஊடாக இந்த பயிற்சி இடம் பெற்றது. கையடக்கத் தொலைபேசி மூலமாக கைன்மாஸ்டர் மென்பெருளை கொண்டு எவ்வாறு கதை உருவாக்குவது பற்றி களப் பயிற்சியுடன் கூடிய வகையில் குறித்த பயிற்சி பட்டரை அமையப் பெற்றது.

ஐந்து நாள் பயிற்சி பட்டறைகள் நிறைவுற்றாலும் முழுமையான முடிவுறுத்தல் அல்ல என்பதை நாம் கண்டு கொண்டோம் நாட்டில் இன நல்லிணக்கத்தை சமூக கட்டமைப்பை பிற கலாசார பண்புகளை கற்றுக் கொள்ள கூடிய விதத்தில் இப் பயிற்சி அமையப் பெற்றுள்ளது இஸ்லாமிய சகோதரர் பௌத்த சகோதரின் வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்து தங்களுக்கு தேவையான கதை உருவாக்கம் என்பது ஒரு வகை மத கலாசார பண்புகளை புரிந்து கொள்ள கூடிய வாய்ப்பு கிட்டுகிறது.தமிழ் மொழி பேசும் ஒருவர் சிங்கள சகோதர உறவுகளின் கூட்டு கதை உருவாக்கத்தின் போது மொழியை கற்று கொள்ளவும் கலாசார விழுமியங்களை கற்றுக் கொள்ளவும் அது வாய்ப்பாக அமைகிறது.

நாட்டில் இதன் ஊடாக சமாதானம் நல்லிணக்கத்தை உருவாக்க ஒரு வழிகாட்டலாக மீடியா கோர்ப் திட்டம் காணப்படுகிறது.

பயிற்சிக்கு முன்னர் மோஜோ கதை உருவாக்கம் பற்றி எவ்வித தெளிவும் இல்லாமல் இருந்தது ஆனால் ஐந்து நாள் கொண்ட முழு நேர களப்பயிற்சியுடன் கதை உருவாக்கம் தொடர்பில் பாரிய தெளிவூட்டல்களை இந்த செயலமர்வு எமக்கு வழங்கியுள்ளதுடன் சமூக கலாசார பண்புகளையும் மதிக்கக் கூடிய ஆற்றல்களையும் வளர்த்துள்ளது.

USAID,IREX நிறுவனம் இதற்காக பூரண உதவிகளை SDJF நிறுவனத்துக்கு தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்பதை கதை உருவாக்க காட்சிகள் எடுத்து காட்டுகின்றன. சமூக பிரச்சினைகள் இதன் ஊடாக வெளிக்காட்டப்படுகிறது நவீன ஊடகவியலின் இவ்வாறான பண்புகள்சார் திட்டம் வரவேற்கத்தக்கது. SDJF நிறுவன வளவாளர்கள் திறம்பட அனுபவத்தை கொண்டு பாரிய மாற்றத்தை எமக்குள் தந்துள்ளார்கள் அவர்களின் தனிப்பட்ட கவனிப்பு பயிற்சியின் போது மேலும் வழிகாட்டியாக அமையப் பெற்றுள்ளது.

கொவிட்19 காரணமாக குறித்த பயிற்சி பட்டரை பிற்போடப்பட்டாலும் வெபினார் மூலமான கற்கை புதுவகை அனுபவத்தை கற்றுத் தந்துள்ளது.

மேலும் IREX நிறுவன பிரதம பணிப்பாளர் திருமதி.ஜீன் மெகின்சீ,SDJF தலைவர் கலாநிதி வணிகசுந்தர, திட்ட பணிப்பாளர் அஸாட் முஹம்மட்,திட்ட முகாமையாளர் சுமுது பெரேரா, திட்ட உத்தியோகத்தர்களான ஹஸரல் காலகே,ரிப்தி நவாஸ்,கீத்மா ஆகியோர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்