நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் 102 பட்டதாரி நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன (photoes/video)

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இன்று(31) பட்டதாரிகளுக்கான  நியமனக்கடிதங்கள்
வழங்கப்பட்டன.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இவ்நியமனங்கள் நாடளாவிய ரீதியாக வழங்கப்பட்டு வருவதுடன் இதன் பிரகாரம் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 102 பட்டதாரிகளுக்கு இன்று(31) பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
மேற்குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலாளர்  நியமனக்கடிதங்களை வழங்கி பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் இன்று வருகை தராத  பெயர்பட்டியலில் உள்ள ஏனைய பட்டதாரிகள்  தாமதியாது பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து நியமனக்கடிதங்களை  பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
குறித்த நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வானது  நாவிதன்வெளி  பிரதேச செயலாளர்  எஸ.ரங்கநாதன்  வழிகாட்டலில் நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா,நாவிதன்வெளி பிரதேச செயலக   கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர் ,சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ் .சிவம் ,  நாவிதன்வெளி  பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன் , நாவிதன்வெளி நாவிதன்வெளி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.யோகஸ்வரன், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித்  , மேலதிக மாவட்ட பதிவாளர்  பி.நித்தியானந்தன் உட்பட பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள்   என பலர் கலந்து கொண்டனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்