யாழ்ப்பாணத்தில் சிறுமியின் நேர்மையான செயல் குறித்து குவியும் பாராட்டுக்கள்- வியப்பில் யாழ்ப்பாணம்!!!!!!
யாழில் பாடசாலை விட்டு வீடு செல்லும் போது வீதியில் கண்டெடுத்த தங்க நகையை பொலிசாரிடம் ஒப்படைத்த சிறுமிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலையில் தரம் 7இல் கல்வி பயிலும் ஜெகதீஸ் ஜெகதீபா என்ற 12 வயதுச் சிறுமியே இவ்வாறு செய்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை குறித்த சிறுமி பாடசாலை விட்டு வீட்டுக்கு வரும் வழியில் மறவன்புலோ மேற்கு பகுதியில் உள்ள ஒழுங்கை ஒன்றில் நகைப் பெட்டி ஒன்றினை அவதானித்துள்ளார்.
சிறுமி அதனை திறந்து பார்த்த போது அதனுள் மூன்று தங்க மோதிரங்கள் மற்றும் சங்கிலி ஆகியன இருந்துள்ளன.
இருப்பினும் சிறுமி அதனை அச்சத்தில் வீட்டுக்கு கொண்டு செல்லாமல் அவ்விடத்திலேயே வைத்து விட்டு வீட்டுக்குச் சென்று சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
பின்னர் வீட்டில் இருந்தவர்கள் அந்த நகைப் பெட்டியை மீட்டு நேற்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பெறுமதிமிக்க நகைகளை நேர்மை மனப்பாங்குடன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தமைக்காக சாவகச்சேரி பொலிஸார் சிறுமிக்கும், சிறுமியின் குடும்பத்தினருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை