அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட 4 பேருக்கு பிணை!!!
கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
குறித்த நால்வரும் இன்று (31) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அரச புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ குருணாகல் பகுதியில் வைத்து ஆகஸ்ட் 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கியமை மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் நீர்க்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை