சகல இன மக்களும் ஒன்றுபடுகின்ற புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்! – அமைச்சர் விமல் தெரிவிப்பு
ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற நிலைப்பாட்டுக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றுபடும் புதிய அரசமைப்பை உருவாக்கக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனக் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பிலியந்தல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் இனங்களுக்கும், மாகாணங்களுக்கும் வலுச் சேர்க்கும் விதத்தில் விடயங்கள் ஒருபோதும் உள்ளடக்கப்படமாட்டாது. இதில் அரசு உறுதியாக இருக்கின்றது.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற தொனிப்பொருளில் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை