வவுனியாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தேடிச் சென்ற அரசியல் பிரமுகர்கள்!!!!

வவுனியாவில் நேற்று (31.08) மாலை கடும் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையினால் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கணேசபுரம் , சமயபுரம் பகுதிகளை சேர்ந்த 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பாதிப்படைந்துள்ளனர்

இந் நிலையில் அவர்களின் நிலமைகளை இன்று (01.09) மதியம் 12.30 மணியளவில் அரசியல்வாதிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் பாதிப்படைந்த வீடுகளை பார்வையிட்டதுடன் அவ் மக்களுடனும் கலந்துரையாடினார்கள்

சேதமடைந்த வீடுகளை புரணமைப்பு செய்வதற்காக மதிப்பீடுகளை வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் அப்பகுதி கிராம சேவையாளரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்