20 ஆவது திருத்த வரைபுக்கு அமைச்சரவை பச்சைக்கொடி – விரைவில் வர்த்தமானி அறிவிப்பு வெளிவரும் என்கிறார் கெஹலிய

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் 20ஆவது திருத்தச் சட்ட வரைபுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை கூடிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

20ஆவது திருத்தச் சட்ட வரைபை விரைவில் வர்த்தமானியில் வெளியிடவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஒருவர் இரண்டு முறை பதவி வகித்தல், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் நாடாளுமன்றத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக் காலத்தை ஐந்தாண்டுகளுக்கு மட்டுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களைத் தவிர  ஏனைய அனைத்து விடயங்களையும் நீக்க 20ஆவது திருத்தச் சட்ட வரைபுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
…………

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.