மாங்குளத்தில் 26 வயதான இளைஞன் தற்கொலை – தீவிர விசாரணையில் பொலிஸார்!!!!

வவுனியா – மாங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாங்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தந்தையுடன் குறித்த இளைஞனும் வீட்டில் இருந்துள்ளனர். தந்தை காலை 7.00 மணியளவில் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். பின்னர் 8.00 மணியளவில் குறித்த இளைஞனின் சகோதரன் வீட்டிற்கு வருகை தந்த சமயத்தின் வீட்டின் அறையினுள் அவ் இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததினை அவதானித்துள்ளார்.

அதனையடுத்து அயலவரின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

26 வயதுடைய தங்கவேல் சிவகுமார் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.