வடக்கு மாகாண செயலாளர்கள் பலருக்குத் திடீரென இடமாற்றம் – ஆளுநர் சார்ள்ஸ் அதிரடி!!

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் பலருக்கு அதிரடி மாற்றங்கள் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ்ஸினால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட இடமாற்றங்களில் தற்போதைய ஆளுநர் செயலக செயலாளர் எஸ்.சத்தியசீலன் கொழும்பு அமைச்சுக்கு விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது இடத்துக்குத் தற்போதைய உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரான திருமதி சரஸ்வதி மேகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஏற்படும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெற்றிடத்திற்கு தற்போதைய மகளிர் விவகார அமைச்சின் செயலாளரான வரதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் விவகார அமைச்சின் செயலாளராக தற்போதைய பேரவைச் செயலக செயலாளரான ரூபினி வரதலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பேரவைச் செயலகத்துக்கும் பதில் செயலாளராகக் கடமையாக புரிவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
……………

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.