திருகோணமலையில் மாஸ் மீடியா டிப்ளோமா பாடநெறி அங்குரார்ப்பண நிகழ்வு!!!!

அகம் மனிதாபிமான வள நிலையத்தின் நிதி மற்றும் நெறிப்படுத்தலுடனும் திருகோணமலை எழுத்தாணி கலைப்பேரவை, Voice of media போன்றவற்றின் ஆதரவுடனும் திருகோணமலையில் மாஸ் மீடியா டிப்ளோமா பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (5) சனிக்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.திருகோணமலையில் தமிழ்  இளம் ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்கில்  ஆறு மாதம் கொண்ட இப்பாடநெறி முற்றிலும் இலவசமாக 25 மாணவர்களுக்கு நடாத்தப்படவுள்ளது.
குறித்த ஊடக கற்கை நெறியின் அங்குரார்ப்பண  நிகழ்வில் முதன்மை அதிதியாக  திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன் கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக  மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் செல்வி கே.சத்திய பிரியா, கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் எஸ்.சிவப்பிரியா, திருகோணமலை எழுத்தாணி கலைல்  பேரவையின் தலைவர் வடமலை ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்