ஆசிரிய ஆலோசகர் சேவைக்குள் மொத்தமாக 20 பாடங்கள் சேர்ப்பு!!

கல்வி அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ஆசிரிய ஆலோசகர் சேவையினுள் மொத்தமாக 20 பாடங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

புதிய கல்விச்சீர்திருத்தத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரீஸ் முன்வைக்கவுள்ள இந்நிலையில் சீர்திருத்தை அடிப்படையாகக்கொண்ட பாடங்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக முதன்மைப்பாடங்களும் தொகுதிப் பாடங்களும் அத்தோடு  தொழில நுட்ப பாடங்களும் இதில் அடங்குகின்றது.

ஆசிரிய ஆலோசகர் சேவை பிரமாணக்குறிப்பில் ஆசிரிய ஆலோசகர் பதவிக்குரிய நியமன பாடங்கள் காணப்படாவிட்டால் தற்போது மேற்பார்வை செய்யும் பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

சேவைக்கு உள்ளீர்ப்பு செய்யப்படும் அனைத்து உத்தியோகத்தர்களும் சேவைப் பிரமாணக்குறிப்பு செயலுறுப்பெறும் தினத்திலிருந்து 5 வருட காலத்துக்குள் முதலாவது வினைத்திறன்கான்  மற்றும் இணைப்பு மொழி சித்தி அடைவதும் அவசியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
………….

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.