“அனைவருக்கும் வீடு” என்ற செயற்றிட்டத்தின் கீழ் அங்கஜனால் 113 வீட்டுத்திட்டம் கையளிப்பு!!!

அனைவருக்கும் வீடு’ என்ற செயற்றிட்டத்திற்கு கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 113 குடும்பங்களுக்கு, 0.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுளை நிர்மாணிப்பதற்கான முதலாம் தவணை கொடுப்பனவு பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இதற்கான நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் (06)  காலை இடம்பெற்றது.

இதன்போது, 113 குடும்பங்களுக்குமான முதலாம் தவணை கொடுப்பனவுகளை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் யாழ் அரச அதிபரும் யாழ் ஒருங்கிணைப்பு சபையின் செயலாளருமான கணபதிபிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.நிக்கொலஸ்பிள்ளை, வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், அரச அலுவலர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.