கல்முனையில் விஷேட விவசாய ஊக்குவிப்பு வாரம் அனுஷ்டிப்பு !!!!.

(எம்.என்.எம்.அப்ராஸ்)

விவசாயத் திணைகளத்தினால்
மாவட்ட மாகாண இடைப் பிரதேசங்களில் செப்டம்பர் 07 முதல் 12 வரையான காலப்பகுதியில் விஷேட விவசாய ஊக்குவிப்பு வாரம்-2020 அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.அஹமட் சனீர் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை விவசாய விரிவாகல் நிலையத்தினால் வீட்டு தோட்ட செய்கையில்
ஈடுபடுவோருக்கான விவசாய ஊக்குவிப்பு செயலமர்வொன்று விவசாய விரிவாக்கல் நிலைய போதனாசிரியர் திருமதி எஸ்.கிருத்திகா தலைமையில்
விரிவாக்கல் நிலையத்தில் இன்று (07)இடம்பெற்றது.

வீட்டு தோட்ட செய்கையில் ஈடுபடுவோர் தோட்ட பயிர் செய்கை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் சிறந்த விவசாய நடைமுறைக்காக
கல்முனை விவசாய விரிவாகல் பகுதியில் உள்ள தோட்ட பயிர் செய்கையாளரான கே .கணேசமூர்த்தி அவர்களுக்கு விவசாய பாதுகாப்பு உபகரணம் இலவசமாக வழங்கப்பட்டதுடன் பயிர் செய்கையின் போது பயனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைளுக்கான
தீர்வுகளும் வழங்கப்பட்டன.

மேலும் வினைத்திறன் மிக்கதாய் தாங்கள் பயிர் செய்கையை மேற்கொள்ளவுள்ளதாக பயனாளிகள் இதன் போது தெரிவித்தனர் .

இதன் போது பயிர் கன்றுகள்,விதைகள் ,
சேதன விவசாயத்தின் போது இயற்கை முறையில் பசளை தயாரிப்பு மற்றும் பூச்சு விரட்டிக்ளை தயாரிக்கும் முறைகள் பற்றிய கையெடு துண்டு பிரசுரமும்வீட்டு தோட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் தொழில்நுட்ப உதவியலாளார் கே.குகழேந்தினி , விவசாய போதானாசிரியர் என்.யோகலக்ஷ்மி மற்றும் பயனாளர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.