உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: ஹிஸ்புல்லா இன்றும் ஆணைக்குழுவில் – மங்கள, ஹர்ஷ, திலும், பூஜித்தும் முன்னிலை

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று இரண்டாவது நாளாக முன்னிலையாகியுள்ளார்.

ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

நேற்று அவரிடம் சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று முற்பகல் 9.30 மணியளவில் அவர் குறித்த ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர்‌ திலும் அமுனுகம, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரும் குறித்த ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளனர்.

அத்துடன், கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.