போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பும், செயலட்டைகள் வழங்கி வைப்பும்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திக்குட்பட்ட பாடசாலைகளின் க.பொ.த சாதாரணதர மாணவர்களின் பரீட்சை அடைவினை முன்னேற்றுவதற்கான செயலட்டைகள் நேற்று (07) வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேசத்தின் தனவந்தர்களின் பங்களிப்பு மற்றும் கோறளைப்பற்று மேற்கு கல்வி அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் குறித்த செயலட்டைகள் பிரதேச பாடசாலைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், கல்குடா ஸக்காத் நிதியத்தின் அங்கத்தவர்கள், கோறளைப்பற்று மேற்கு கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி சபை அங்கத்தவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு, கல்குடா ஸக்காத் நிதியத்தினால் கோறளைப்பற்று மேற்கு கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

அன்பளிப்பு செய்யப்பட்ட குறித்த இயந்திரத்தை கோறளைப்பற்று மேற்கு கோட்ட பாடசாலைகளின் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படவுள்ளது என்று கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்ஸாப் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.