பறையன் ஆற்றுப்பாலத்தினையும், வீதியையும் சீரமைத்துத்தருமாறு தென்னமரவடி மக்கள் கோரிக்கை!!!

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய தமிழர்களின் பூர்வீக பகுதியான மணலாற்றினையும், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தினுடைய தமிழர்களின் பூர்வீக பகுதியான தென்னமரவடியினையும் ஊடறுத்து பாய்கின்ற பறையன் ஆற்றின் ஊடான பலத்தினை சீரமைத்துத்தருவதுடன், அதனோடு இணைந்த வீதியையும் சீரமைத்துத் தருமாறும் தென்னமரவடிமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

குறிப்பாக தென்னமரவடி மக்களுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் அக்கரைவெளி மற்றும் மாரியாமுனை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயநிலங்கள் காணப்படுகின்றது. அந்த விவசாய நிலங்களுக்கு அவர்கள் இலகுவாகச் சென்று, தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே பறையன் ஆற்றுப் பாலத்தினையும், அதனோடிணைந்த வீதியையும் சீரமைத்துத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பறையன் ஆற்றின் ஊடாக கடந்த 1980ஆம் ஆண்டு, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மரத்தினால் ஆன ஓர் பாலத்தினை அமைத்துத் தந்திருந்ததாகவும், தாம் நீண்டகாலம் இடப்பெயர்வினைச் சந்தித்ததால் குறித்தபாலம் மற்றும் அதனோடிணைந்த வீதியும் தற்போது அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை பறையன் ஆற்றினுள் சிதைவடைந்த நிலையில் சில மரக் குற்றிகள் காணப்படுகின்றன. அவற்றினை அழிவடைந்த பாலத்தினுடைய எச்சங்கள் என தென்னமரவடி மக்கள் அடையாளப்படுத்துகின்றனர். அத்தோடு ஆற்றிலிருந்து சிறிது தூரத்தில் ஆங்காங்கே காடுகளுக்குள் சிறிய பாலங்களும் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன. அவை அங்கே வீதி இருந்ததற்கான அடையாளமாக தென்படுகின்றன.

இந் நிலையில் குறித்த பாலத்தினையும்அதனோடு இணைந்த வீதியையும் சீரமைத்துககொடுக்கும்படி முன்னாள் வடமாகாசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் உரியவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தென்னமரவடி மக்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாம் கடந்த 1984ஆம் ஆண்டு எமது பகுதிகளைவிட்டு இடம்பெயர்ந்து, 2011ஆம் ஆண்டு எமது பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்பட்டோம்.

இந் நிலையில் மீள் குடியமர்த்தப்பட்டு இதுவரையிலும்தென்னமரவடியில் ஒரு சுமூகமான நிலை ஏற்படவில்லை.

அந்தவகையில் பறையன் ஆற்றிற்கு மறுகரையில் உள்ள அக்கரை வெளிப்பகுதியில் தென்னமரவடி பகுதியைச் சேர்ந்த எமக்கும், முல்லைத்தீவு மாவட்டதின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மக்களுக்குமாக 500ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்கள் அங்கு காணப்படுகின்றன.

அந்த வயல் நிலங்களுக்கு நாம் சென்று விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, கடந்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பறையன் ஆற்றின் ஊடாக ஓர் பாலத்தினை அமைத்துத்தந்திருந்தார்.

அப்பாலத்தினூடாக ஆற்றின் மறு கரைக்குச் சென்று, விவசாய நடவடிக்கைகளை நாம் சிறப்பாக முன்னெடுத்திருந்தோம்.

இந் நிலையில் கடந்த 1984ஆம் ஆண்டு நாம் எமது பகுதிகளைவிட்டு இடம்பெயர்ந்த நிலையில், குறித்த பறையன் ஆற்றுப் பாலம் அழிக்கப்பட்டுள்ளதுடன், பாதைகளும் அழிவடைந்துள்ளன. இதனால் நாம் எமது வயல் நிலங்களுக்குச்சென்று விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாத நிலையிலுள்ளோம்.

அந்தவகையில் அழிவடைந்துள்ள குறித்த பாதையினையும் பாலத்தினையும், உரியவர்கள் சீரமைத்து தந்தலேயே எமது வயல் நிலங்களுக்குச் சென்று நாம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.

எனவே எமது வாழ்வாதாரத்தினைக் கருத்தில்கொண்டு இப் பாலதினையும் பாதையினையும் விரைவில் சீரமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் – என்றனர்.

இது தெடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

தென்னமரவடி மக்கள் திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு முல்லைத்தீவோடு மிக நெருக்கமான பிணைப்பு இருக்கின்றது.

தென்னமரவடிப் பகுதிக்கு அருகேதான் பறையனாறு காணப்படுகின்று. குறித்த பறையனாறு மற்றும், கொக்கிளாய் ஆறு ஆகியவையே திருகோணமலை மாவட்டத்தினையும் முல்லைத்தீவு மாவட்டத்தினையும் பிரிக்கின்ற இடங்களாகக் காணப்படுகின்றன. அதாவது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணஙகளைப் பிரிக்கின்ற இடங்களாகக் காணப்படுகின்றன.

இந்த பறையனாற்றிற்கு அருகாமையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்குள் அக்கரைவெளி, மாரியாமுனை போன்ற வயல் வெளிகள் காணப்படுகின்றன.

அக்கரைவெளி என்னும் இடத்தில் 83பயனாளிகளுக்குரிய, 390ஏக்கர் வயல் நிலங்கள் காணப்படுகின்றன.
குறித்த வயல் நிலங்களுக்குரிய பயனாளிகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும், திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்களாவர்.

அதேவேளை மாரியாமுனையில் 113ஏக்கர் வயல் நிலங்கள் காணப்படுகின்றன. அந்த வயல்நிலங்கள் கொக்கிளாய் , தென்னமரவடி தமிழ் மக்களுடயவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறாக அந்தப் பகுதிகளில் தமிழ் மக்களுக்குரிய 503ஏக்கர் வயல் நிலங்கள் காணப்படுகின்றன.

இந் நிலையில் குறித்த வயல் நிலங்களில் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அக் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் செல்லும்போது வனஜீவராசிகள் திணைக்களம், மற்றும் வன இலாகத் திணைக்களம் என்பன மக்களை அங்கு செல்லவிடாது தடுக்கின்றனர்.

இது விடயமாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடியதையடுத்து அங்கு பயிர்ச்செய்கை நடவடிக்கை மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மேலும் மிக முக்கியமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப் பகுதியான மணலாற்றுப் பகுதியினையும், திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப் பகுதியான தென்னமரவடியையும் ஊடறுத்து பறையனாறு பாய்கின்றது.

எனவே திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தென்னமரவடி விவசாயிகளுக்கும், முல்லைத்தீவின் எல்லைப் பகுதிகளான மாரியாமுனை அக்கரைவெளி போன்ற பகுதிகளில் விவசாய நிலங்கள் காணப்படுவதனால், தென்னமரவடி விவசாயிகள் பறையன் ஆற்றினைக் கடந்தே தமது விவசாயநிலங்களுக்குச் செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது.

ஆனால் அவர்களுக்கான போக்குவரத்துப் பாதை என்பது சீரின்றியே காணப்படுகின்றது. பறையனாற்றினூடாக ஒரு பாலத்தினை அமைப்பதன்மூலமாக, நிச்சயமாக இந்த தென்னமரவடி மக்கள் தமது வயல் நிலங்களுக்கு இலகுவாக வருகைதந்து பயிரச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும்.

எனவே உரியவர்கள் பறையனாற்றினூடாக ஒருபாலத்தினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்என்பதே இந்த மக்களது கோரிக்கையாகும் – என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.