கண்டி நிலநடுக்கம் தொடர்பாக புதிய தகவல் வெளியிட்ட நளின் டி சில்வா!!!

கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற நிலநடுக்கம் குறித்து தொடர்ந்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புவிச்சரிதவியல் திணைக்களத்தின் கனியவள ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் நளின் டி சில்வா கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.

கண்டி திகன, பல்லேகல உள்ளிட்ட சில இடங்களில் கடந்த மாதம் 29ம் திகதி மற்றும் 2ம் திகதி இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிச்டர் அளவு கோலிலும் பதிவாகியது.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட நளின் டி சில்வா, அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய வள அகழ்வு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.