குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள பாடசாலையை இடைவிலகிய மாணவர்களின் கல்விக்கு உதவி வழங்கள் – மட்டக்களப்பு கிழக்கு சமூக நிறுவனம்.

குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களை மீளச் சேர்த்து அவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பணம் வழங்கும் நிகழ்வு செயலகத்தில் இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்குகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.சபூஸ் பேகம், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிழக்கு சமூக அபிவிருத்தி நிறுவன உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது இடைவிலகிய மாணவர்களை மீளச் சேர்த்து அவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 2500 ரூபாய் பணம் இருபத்தைந்து மாணவர்களது பெற்றோருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.