கம்பளை உலப்பன மாவில தோட்ட தொழிலாளர்களின் காணிப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்தார் ஜீவன் தொண்டமான்.

(க.கிஷாந்தன்)

கம்பளை உலப்பன மாவில தோட்ட தொழிலாளர்கள் காலம் காலமாக இதே தோட்டத்தில் தொழில் செய்து வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு வீடமைப்பதற்கு கூட ஒரு  காணியை  தோட்ட நிர்வாகம் வழங்கவில்லை. இதே சமயத்தில் இதே தோட்டத்தில் சேவை புரியும் சேவையாளர்களுக்கு நிர்வாகம் தோட்ட காணியை திட்டமிட்டு பிரித்து கொடுக்க எடுத்த முயற்சியினால் நிர்வாகத்துக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனதா தோட்ட அபிவிருத்தி சபைக்கு [ஜனவசம] சொந்தமான மேற்குறித்த மாவில தோட்டத்தில் காலம் காலமாக உழைத்து வரும் அவர்களுக்கு ஒரு அங்குல காணியெனும் இதுவரைக்கும் நிர்வாகம் வழங்கவில்லை. ஆனால் ஜனவசம அங்குள்ள சேவையாளர்களுக்கு தான்தோன்றி தனமாக எடுத்த முயற்சி வன்மையாக  கண்டிக்கத்தக்கது.

இது தொடர்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் அத் தோட்ட தொழிலாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து  இதற்கான காத்திரமான தீர்வை  அடையும்  பொருட்டு பெருந்தோட்ட துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன. அவர்களின் கவனத்திற்கு கொன்டுச்சென்றதையடுத்து நேரடியாக மாவில தோட்ட மக்களையும்  சம்மந்தபட்ட தோட்ட நிர்வாகத்திடம் கலந்துரையாடி தோட்ட சேவையாளர்களுக்கு  வழங்கயிருந்த காணியை அமைச்சரின் தலையீட்டால் உடனடியாக இடை நிறுத்தப்பட்டது.

இச் சந்திப்பின் போது இ.தொகாவின் உப தலைவர் துரை மதியுகராஜா,  இ.தொ.காவின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளரும், உதவிசெயலாளருமான பரத் அருள்சாமி ஆகியோருடன் சம்மந்தப்பட்ட தோட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.