இரணைமடு குளத்தின் கீழ் விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாய குழு கூட்டம்!!!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் விவசாயத்தில் மேற்கொள்ளும் விவசாய குழு கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் சம்மேளனத்தில் இடம்பெற்றது.

விவசாய குழுக்கூட்டத்தில் இரனைமடு  குளத்திலிருந்து விதைப்புக் குரிய ஆரம்ப நீர்  வளங்கள் தொடர்பாகவும், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தொடர்பானவும், நெல் விதைப்பு எக்காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் மற்றும் இரணைமடு குளத்தின் கீழ் உள்ள கரடியின் ஆற்றுப்படுகை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவது தொடர்பாகவும் இக்குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது

இதன்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கருத்து தெரிவிக்கும்போது இரணைமடு குளத்தின் கீழ் சட்டவிரோதமாக மணல் அகழ்வு தடுத்து நிறுத்துவதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தில் இணைத்து சட்டவிரோத மணல் அகழ்வு தடுத்து நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றோம் குறிப்பாக இப்பிரதேசங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு வேறு மாவட்டங்களில் இருந்து அல்லது சகோதர மொழி பேசுபவர்களும் இந்த செயலில் ஈடுபடவில்லை குறிப்பாக எமது மாவட்டத்தில் இருப்பவர்களை இவ்வாறான  செயலில் ஈடுபட்டு வருகின்றார்கள் இது தொடர்பாக நாம் கவனத்தில் கொண்டு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்வதற்கு தீர்மானித்துள்ளோம் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இப் விவசாய குழு கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகள், திருச்சி மாவட்ட கமநல சேவைத் திணைக்களத்தின் அதிகாரிகள், மாவட்ட விவசாய உற்பத்தி ஆராய்ச்சித் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.