புதுநகர் 6 ஆம் குறுக்கு வீதியினை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்!!!

மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட புதுநகர் 6ஆம் குறுக்கு வீதியினை புனரமைக்கும் பணிகள் இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாநகர சபைக்கு மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகளின் ஊடாக 20ஆம் வட்டார உறுப்பினர் இரா.அசோக் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க இவ் வீதியானது கொங்றிட் வீதியாக செப்பனிடப்படவுள்ளது.

மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் ஊடாக 400 மீற்றர் நீளத்தில் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த வீதியின் அபிவிருத்திப் பணிகளை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபையின் உறுப்பினர் இரா.அசோக், மாநகர பொறியியலாளர் சித்திரதேவி லிங்கேஸ்வரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

மழை காலங்களில் வெள்ள நீர் தேங்கி அன்றாட போக்குவரத்து செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்தாகவும், தற்போது இவ் வீதியை புனரமைத்து தந்த மாநகர முதல்வருக்கும் குறித்த வட்டார உறுப்பினர்களுக்கும் பொது மக்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்