ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள வடிகான்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான கலந்துரையாடல் சபையின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.(photos)

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள வடிகான்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான கலந்துரையாடல் சபையின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

தவிசாளர் ஏம்.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உப தவிசாளர் யு.எல்.அஹமட், சபை உறுப்பினர்களான ஏ.ஜி.அமீர், எம்.பி.ஜெஸிமா, எம்.பி.ஜெமிலா, ஏ.எல்.ஜெஸ்மின் பீவி, சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் மற்றும் சமூக மட்ட அமைப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிர்மானிக்கப்பட்டுள்ள வடிகான்கள் அனைத்தும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பிரதேச சபையினால் சுத்தம் செய்கின்ற போதிலும் குடியிறுப்பாளர்கள் தமது வீட்டுக் கழிவு நீரினையும், வீட்டுக் குப்பைகளையும் பொறுப்பின்றி வடிகாண்களில் இடுவதனால் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதோடு கட்டட நிர்மான பொருட்களை வடிகான்களின் மேல் கொட்டுவதனால் வடிகாண்களில் அடைப்பும், மூடிகள் உடைந்தும் வருகின்றன.

இது தொடர்பாக சமூக மட்ட அமைப்புக்களுடன் இணைந்து மக்களுக்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்றினையும், சுத்தம் செய்யப்பட வேண்டிய அனைத்து வடிகாண்களையும் ஒரே முறையில் செய்வதோடு, பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புக்களிடம் உதவிகள் கோரப்பட்டுள்ளன.

அரச சார்பற்ற நிறுவனங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள் என்பன இதற்கு சமூக ரீதியாகவும், நிதி ரீதியாகவும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளமை மிகவும் வரவேற்கத்தக்க விடயம் என்று தவிசாளர் ஏம்.எம்.நௌபர் தெரிவித்தார்.

 

ந.குகதர்சன் – 0778730529

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.