சருமப்பூச்சு கிறீம் வியாபார நிலையங்கள் பரிசோதனை – வியாபாரிகளுக்கு நுகர்வேர் அலுவல்கள் அதிகார சபை விடும் எச்சரிக்கை

வியாபாரிகளுக்கு நுகர்வேர் அலுவல்கள் அதிகார சபை விடும் எச்சரிக்கை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற சருமப்பூச்சு கிறீம் வகைகள் தொடர்பாக வியாபாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு செயற்றிட்டமொன்று நாடுபூராகவும் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையானது இந்த செயற்றிட்டத்தை முதலாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரம், காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில் வியாபரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டம் வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது கிழக்கு மாகாண பணிப்பாளர ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர்களான எம்.எம்.இர்ஷாத், பி.ஜீனேஸ்ராஜ், ஏ.சி.ஏ.அஹாத், எம்.எம்.எம்.பஷ்மீர், ஐ.எல்.மர்ஜுன், ஏ.சி.எம்.சஜீத், எம்.எம்.நியாஸ், ஏ.எல்.எம்.சதான், ஏ.பி.எம்.இர்பான் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

இதன்போது குறித்த வியாபார தளங்களுக்குச் சென்று அங்கு வியாபாரிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுகின்ற சருமப்பூச்சு கிறீம் வகைகளானது இலங்கையின் தர நிர்ணயத்திற்கமைவாக எவ்வாறான உட்கூறுகள் கொண்டிருக்க வேண்டும்.

அவ்வகையான சருமப்பூச்சுக்களில் கறீம்களில் பொறிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான விழிப்புணர்வு வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டதுடன், இன்று சந்தையில் காணப்படும் சருமப்பூச்சு வகைகளில் பெரும்பாண்மையானவை சட்ட ரீதியற்ற முறையில் இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படுவதனால் இதனை பாவிக்கும் மக்களுக்கு பல்வேறு விதமான சரும நோய்கள், பக்க விளைவுகள் தொடர்பாக வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மேலும் இவ்வாறு தடை செய்யப்பட்ட சரும பூச்சு வகைகளை விற்பனை செய்வது, விற்பனைக்கு காட்சிப்படுத்துவது மற்றும் களஞ்சியப்படுத்துவது போன்ற விடயங்கள் தண்டனைக்குரிய குற்றம் என்பதனால் வியாபாரிகள் இவ்வகையான சருமப் பூச்சு கிறீம் வகைகளை வைத்திருப்பது கண்டு பிடிக்கப்படுமாக இருந்தால் குறித்த வியாபார நிலையத்துக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படுவதுடன் குறித்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு ஒப்படைக்கப்படும் என கிழக்கு மாகாண பொறுப்பதிகாரி ஆர்.எப் அன்வர் சதாத் தெரிவித்துக் கொண்டார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.