வடக்கு – கிழக்குப் பகுதியில் முதலீடுகளை அதிகரிக்குக – புலம்பெயர்ந்த கனடா தமிழ் முதலீட்டாளர்களுடனான சந்திப்பில் மஹிந்த வலியுறுத்து (photo)

புலம்பெயர்ந்த கனடா தமிழ் முதலீட்டாளர்களைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று சந்தித்துள்ளார்.

வடக்கு – கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் கனடாவில் இருக்கக்கூடிய முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் ராஜலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை செய்து வரக்கூடிய குறித்த இரண்டு முதலீட்டாளர்களும் வடக்கு – கிழக்கு மக்களை தொழில் ரீதியாக உள்ளவாங்கியதற்காகப் பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டார்.

இதன்போது பிரதமர் மஹிந்த, நாட்டில் உள்ள சூழ்நிலையில் வடக்கு – கிழக்குப் பகுதியில் தங்களின் முதலீடுகளை ஊக்கப்படுத்தி, அங்கு இருக்கக்கூடிய மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுப்பதனூடாக அப்பகுதிகளில் தனியார் நிறுவனங்களை வெகுவிரைவில் அதிகரிக்க வேண்டும் எனவும், அம்முயற்சிக்குத் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.