டெங்கு நோய் அற்ற கிண்ணியா “விழிப்புணர்வு பணியில் பட்டதாரி பயிலுனர்களால் தீவிர டெங்கு வேட்டை!!!

கிண்ணியா பிரதேச பகுதியில் உள்ள இடங்களில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு இடம் பெற்றது.
குறித்த விழிப்புணர்வானது கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி தலைமையில் இன்று (12)காலை பிரதேச செயலக வளாகத்தில் வைத்து தொடக்கி வைக்கப்பட்டது.
புதிதாக நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் இதில் வீடு வீடாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வினை வழங்கியதுடன் டெங்கு பரவும் இடங்கள் குடம்பிகள் காணப்படும் இடங்கள் அழிக்கப்பட்டன. டெங்கற்ற கிண்ணியா எனும் தொனிப் பொருளின் கீழ் இடம் பெற்ற விழிப்புணர்வு நடவடிக்கையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,பட்டதாரி பயிலுனர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், டெங்கு ஒழிப்பு வெளிக்கள உதவியாளர்கள் என பலர் பங்கேற்றார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.