ஜெனீவா நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இல்லை!!!

எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் இம்முறை இலங்கை ஒற்றையாட்சி அரசு பற்றிய விவகாரம் இல்லையெனத் தெரிய வருகின்றது.

14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள கூட்டத் தொடர் ஒக்ரோபர் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெறுமென நிகழ்ச்சி நிரலில் கூறப்பட்டுள்ளது.

மியன்மார், யேர்மன், கம்போடியா, கொங்கோ வெனிசுலா சிரியா தென்சூடான் ஆகிய நாடுகளின் விவகாரங்களும் மற்றும் மரண தண்டனைச் சட்டங்கள் பற்றிய விவகாரங்களோடு நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய விடயங்களுமே நிகழ்ச்சி நிரலில் குறிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பான பிரேரணையில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே அதன் காரணமாக இலங்கை விவகாரம் இம்முறை அமர்வில் தவிர்க்கப்பட்டதா அல்லது நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய விவகாரங்கள் பேசப்படும்போது இலங்கை விவகாரம் எடுக்கப்படுமா? என்பது குறித்து எதுவுமே அறிய முடியவில்லை.

இலங்கை வெளிவிவகார அமைச்சு நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வு பற்றி எதுவுமே கருத்துக் கூற விரும்பவில்லை.

2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கம் பதவி ஏற்ற போது ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி இருந்தது.அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது

நிலைமாறு கால நீதி வலியுறுத்தப்பட்டிருந்தது.அரசியல் தீர்வுகான ஆரம்பமாக 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த பிரேரணையில் கூறப்பட்டிருந்தது .

இதனை நிறைவேற்றுவதற்காக முதல் இரண்டு ஆண்டுகளும் அதன் பின்னரான இரண்டுகளுமாக மொத்தம் நான்கு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கபட்டிருந்தது.

இவ்வாறான ஒரு நிலையிலேயே 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மைத்திரி – ரணில் அரசாங்கம் பதவி இழந்தது.கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்றார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.