மட்டக்களப்பு மாநகர சபையின் “மணல் வீதியில்லா மாநகரம்” எனும் கருத்திட்டம் ஆரம்பம்!!

மட்டக்களப்பு மாநகர சபையின் “மணல் வீதியில்லா மாநகரம்” எனும் கருத்திட்டத்தின் ஊடாக மணல் வீதிகளை கிறவல் வீதியாக செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி மட்டக்களப்பு  மாநகரசபையின் ஆறாம் வட்டார உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜாவின் வேண்டுகோளிற்கிணங்க கருவேப்பங்கேணி அம்புறூஸ் குறுக்கு வீதிகளை கிறவல் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மாநகர சபையின் சொந்த வருமானத்தின் மூலமாகவும், பொது மக்களின் வரிப்பணத்தின் ஊடாகவும் மாநகர சபையின் முழுமையான வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபையின் உறுப்பினர்களான தம்பிராஜா இராஜேந்திரன், சிவம் பாக்கியநாதன், துரைசிங்கம் மதன் மற்றும் மாநகர பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.