கலாசார நிலையம் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

இந்தி அரசின் நிதியில் யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார நிலையம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (14) வடக்குமாகாண ஆளுநர் அவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வடக்குமாகாண ஆளுநர் கௌரவ சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த கிராமிய, வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த அவர்கள் முன்னிலையில் அமைக்கப்பட்டுள்ள கலாசார நிலையம் தொடர்பிலும், எதிர்கால திட்டங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இக் கலந்துரையாடலில் யாழ் இந்தியத் துணைத் தூதுவர் திரு.எஸ். பாலச்சந்திரன், யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்குமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர், இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், ஆளுநர் அலுவலக அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், யாழ் மாநகரசபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.