சி.வெங்காயம், வாழை, உழுத்து நிலக்கடலை பயிர்களுக்கு காப்புறுதி செய்ய நடவடிக்கை – கமத்தொழிலமைச்சர்!!

வடக்கின் விவசாய மறுமலர்ச்சிக்காக கெளரவ யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளிற்க்கு ஏற்ப யாழ் விஜயம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு கமத்தொழில் அமைச்சர் மகிந்த அளுத்தகம அவர்கள் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (15) இடம்பெற்ற விவசாயிகளுடனான கலந்துரையாடலில் சின்னவெங்காயம், வாழை, உழுந்து, நிலக்கடலை பயிர்களுக்கு காப்புறுதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

பல காலமாக யாழ்  விவசாயிகள் குறிப்பிட்ட இப்பயிர்களிக்கு காப்புறுதி செய்யப்படவேண்டும் என அங்கஜன் இராமநாதனை கேட்டதிற்கு அமைய இக் காப்பறுதி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுள்ளது. குறிப்பிட்ட ஒரு சில பயிருக்கு இலவச காப்புறுதி வழங்கப்படவுள்ளது.

“சுபீட்சமான நோக்கில் விவசாயமறுமலர்ச்சி” எனும் தொனிப்பொருளில் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களின் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் யாழ் வருகை தந்த கமத்தொழிலமைச்சர் மஹிந்த அளுத்தகம அவர்களின் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்திலும் கிளிநொச்சி கமநல சேவை நிலையத்திலும் விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (15) இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சர்  டி.பி. ஹேரத் ,நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் ஷீந்திர ராஜபக்ஷ

, உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,வடமாகாண ஆளுனர் சார்ளஸ் , யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜனர இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்கள், விவசாய பணிப்பாளர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், கமநல சேவைத்திணைக்கள உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

விவசாய பயிர்களின் காப்புறுதி, விவசாய கால்வாய்கள் மற்றும் குளங்களின் புனரமைப்பு, உருளைக்கிழங்குக்கான மானியம், விவாசாய காணிகள், குழாய்கிணறு சம்மந்தமாக, விவசாயகாணிகளில் இடம்பெறும் மண்அகழ்வு, நெல்உற்பத்திக்கு நிலையான விலை நிர்ணயம் தொடர்பில், விவசாய கடன்கள் சம்மந்தமாக, கட்டாக்காலி மாடுகள், நாய்களின் சேதங்கள் தொடர்பிலும் குரங்குகள், பன்றிகளின் பயிர்சேதங்கள் தொடர்பிலும் பண்ணை விலங்குகள் உற்பத்தியின் வீழ்ச்சி எழுச்சி தொடர்பாகவும் விவசாய உரங்கள் தொடர்பாகவும் இடைத்தரகர்கள் அற்ற சந்தைப்படுத்தல் பற்றியும் சந்தை வாய்ப்புக்கள் தொடர்பாகவும் விவசாய போதானாசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு குறிப்பிட்ட சில பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வும் எட்டப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.