அமைச்சர் மிகிந்தானந்த அழுத்கமகே இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார்.(photos)

அமைச்சர் மிகிந்தானந்த அழுத்கமகே இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தஅமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேயுடன் பண்யை மேம்பாடு மற்றம் முட்டை சார்ந்த தொழில் அமைச்சர் டிபி கேரத், நெல் மற்றும் தானியவகைகள் சேதன உணவுகள் அமைச்சர் சசேந்திர ராஜபக்ச, பாராளுமன்ற பிரதி குழுக்களின் தலைவரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான அங்கயன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் திணைக்களங்கள் சார் உத்தியுாகத்தர்கள் என பலரும் வருகை தந்திருந்தன்ர.

இதன்போது குறித்த விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் திராட்சை உள்ளிட்ட விவசாய ஆராய்ச்சிகளை பார்வையிட்ட குறித்த குழுவினர் அங்கு காளான் வளர்ப்பு ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தினையும் திறந்து வைத்தனர். குறித்த நிகழ்வு இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி அரசகேசரி தலைமையில்இடம்பெற்றது.

இதன்போது அங்கு புதிதாக ஆராய்ச்சி செய்யப்பட்ட மரக்கன்றுகள் மற்றம் தானிய உற்பத்திகளும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. அவற்றையும் அவர்கள் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்