மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 20வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வையொட்டி குர்ஆன் தமாமும், விஷேட துஆப் பிரார்த்தனையும்:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 20வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வையொட்டி குர்ஆன் தமாமும், விஷேட துஆப் பிரார்த்தனையும் இன்று (16) பாலமுனை பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் ஏ.எல்.எம்.அலியார் தலைமையில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஞாபகார்த்த நிகழ்வில் பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரி மாணவர்களினால் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டு, கல்லூரி அதிபர் மௌலவி ஏ.எல்.ஸாஜித் ஹூஸைன் பாகவியினால் விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்த்தி வைக்கப்பட்டது.

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 20வது ஆண்டு ஞாபகார்த்த நினைவாக பாலமுனை மத்திய குழுவினால் ஒரு தொகுதி யாசின் குர்ஆனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரி மாணவர்களுக்காக அதன் அதிபர் மௌலவி ஏ.எல்.ஸாஜித் ஹூஸைன் பாகவியிடம் அமைப்பாளர் ஏ.எல்.எம்.அலியார், செயலாளர் ஏ.ஆர்.றினோஸ் பொருளாளர் எஸ்.ரீ.எம்.குதைப் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்