சட்டவிரோதமாக ஹெரோயின் ஐஸ் மற்றும் கஞ்சாவினை வைத்திருந்த நால்வருக்கு விளக்கமறியல்!!!

சட்டவிரோதமாக ஹெரோயின் ஐஸ்  மற்றும் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நால்வருக்கு  எதிர்வரும் செப்டம்பர் மாதம்  30 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு  சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 16.09. 2020 புதன்கிழமை இரவு     நிந்தவூர் பிரதேசத்தில்  போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் சிலர்  நடமாடுவதாக சம்மாந்துறை இரகசிய  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் ஆலோசனைக்கமைய   சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பிரதம பொறுப்பதிகாரி  நௌபரின்  வழிகாட்டலுக்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா   தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன்  விஜயவர்த்தன  பொலிஸ் கன்டபிள்களான  துரைசிங்கம் திலகரட்ன  உள்ளிட்ட குழுவினர்  மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கையினால்  இரவு  சட்டவிரோதமாக ஹெரோயின் ஐஸ் கேரளா கஞ்சாவினை   வைத்திருந்த நான்கு சந்தேக நபர்கள்  நிந்தவூர்   பகுதியில் வைத்து   கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபர்களிடம் இருந்து  2 கிராம் ஹெரோயின், 220 மில்லி கிராம்  ஐஸ்,  3 கிராம் கேரளா கஞ்சா என்பன  கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் கைதான  45 ,30 ,28 ,17 ,வயதுடைய சந்தேக நபர்கள்   அனைவரும்   இன்று(17)  சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30  ஆம் திகதி வரை   விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.